கும்மிடிப்பூண்டி குடியரசுதின விழாவில் வட்டார வளர்ச்சி ஆணையர் சந்திரசேகர் கொடியேற்றி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்


கும்மிடிப்பூண்டி,வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா பள்ளி மாணவர்களோடு கொண்டா டப்பட்டது. வட்டார வளர்ச்சி ஆணையர் சந்திரசேகர், பிடிஓ அமிர்த மன்னன் ஆகியோர் தலைமை தாங்கினர். அலுவலர் மேலாளர்.ரவி, அலுவலக ஊழியர் மாதவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 


தொடர்ந்து ஆணையர் சந்திரசேகர் தேசியக்கொடி ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பரிசுப் பொருட்கள் வழங்கினார். அப்போது பள்ளி மாணவர்கள் புகையிலை ஒழிப்பு, தினமும் ஒரு திருக்குறள், இந்தியா வல்லரசு ஆக வேண்டுமென உள்ளிட்ட உறுதிமொழிகளை அதிகாரிகளோடு எடுத்துக் கொண்டனர். அப்போது அவர்களுக்கு பேனா, பென்சில் போன்றவற்றை ஆணையர் சந்திரசேகர் வழங்கினார். இதேபோல் கும்மிடிப்பூண்டி-ரெட்டம்பேடு சாலையில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சம்பத் ஏற்பாட்டில் நீதி பதி திலீப்பாபு தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.


அவருடன் சங்க நிர்வாகிகள் சேகர், சரவணன், ரோஸ் தீனதயாளன் ஆகிய பல்வேறு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சகிலா அறிவழகன் தலைமை யில் தேசியக்கொடி ஏற்றி தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 


இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பெத்திகுப்பம் நடுநி லைப் பள்ளியில் முன்னாள் துணை தலைவர் குணசேக ரன், லோகநாதன், மற்றும் ஆசிரியர்கள் சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Post a Comment

0 Comments