நீலகிரி மாவட்டத்தில் உறைபனி.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 


நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் அடுத்த, 24 மணி நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த மையத்தின் அறிக்கை:

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி, 10 வரை, இதே நிலை தொடரலாம். ஜன., 11ல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.

வடக்கில் இருந்து வரும் குளிர் காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால், நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், அடுத்த, 24 மணி நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை லேசான பனிமூட்டம் காணப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், சில இடங்களில் உறைபனி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அடர்ந்த வனப்பகுதியாக உள்ள அவலாஞ்சியில், இதன் தாக்கம் கடுமையாக உள்ளது. இங்கு மைனஸ், 3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில், வெப்பநிலை பதிவானதாக, தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments