சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் வரும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வர். வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. சிறப்பு ரயில்களை எப்போது அறிவிப்பர் என எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், வரும் ஜனவரி 10ம் தேதி பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரு டூ தூத்துக்குடி
* வரும் ஜனவரி 10ம் தேதி பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் 06569) இயக்கப்படும்.
* மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 11ம் தேதி மைசூருக்கு இயக்கப்படும்.
நிற்கும் ஸ்டாப்கள்
இந்த ரயில் மைசூரு, பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி சென்றடையும்.
ஏற்கனவே, தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் விவரம் பின்வருமாறு:
1. சென்ட்ரல் டூ நாகர்கோவில்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 12, 19ம் தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (ரயில் எண் 06089) மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
2. திருநெல்வேலி டூ தாம்பரம்
திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 12, 19,26ம் தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண் 06092) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20, 27ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து (ரயில் எண் 06091) பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
3. தாம்பரம் டூ கன்னியாகுமரி
தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி 13ம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண் 06093) மறுநாள் பிற்பகல் 12:30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 14ம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
4. ராமநாதபுரம் டூ தாம்பரம்
ராமநாதபுரத்தில் இருந்து ஜனவரி 10, 12, 17ம் தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு சிறப்பு ரயில் (ரயில் எண்- 06104) மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 11, 13, 18ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5. 15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.
5. தாம்பரம் டூ திருச்சி
தாம்பரத்திலிருந்து ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ம் தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் ஜன்சதாப்தி அதிவிரைவு ரயில் (ரயில் எண் 06191) இரவு 11:35 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, இந்த ரயில் அதே நாள்களில் திருச்சியில் இருந்து காலை 5:30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
0 Comments