• Breaking News

    பொன்னேரியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், பணியின் போது உயிரிழக்கும் கிராம உதவியாளரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு வந்த சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த உதவியாளரிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அரசு பங்கீடுடன் உடனே வழங்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பிய வருவாய் கிராம உதவியாளர்கள் புதிதாக பணி அமர்த்தபட்ட வருவாய் கிராம உதவியாளர்களுக்கு நிரந்தரமாக சி.பி.எஸ். திட்டத்தின் கீழ் நிரந்தரமாக ஊதியம் வழங்குதல், கிராம வருவாய் உதவியாளர்களை கிராம பணி தவிர்த்து வேறு எந்த பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என வலியுறுத்தி  மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

     இதில் பொன்னேரி வட்ட தலைவர் ரவிக்குமார், பொன்னேரி வட்ட செயலாளர் செல்வகுமார், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், பொன்னேரி வட்ட துணைத் தலைவர் ஸ்டாலின், பொன்னேரி வட்ட துணை செயலாளர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிபாபு, மதன், உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    No comments