அண்ணா பல்கலைக்கழக விவகாரம்..... நடிகர் சிவகார்த்திகேயன் சொன்னது என்ன...?

 


தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு செய்தியாளர்கள் அவரிடம் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் “இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என்பதே அனைவரது விருப்பம்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் தான் அனைவரும் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments