முத்துகிருஷ்ணபேரிஸ்ரீபரமசக்தி அம்மன் கோவில் கொடை விழா
முத்துகிருஷ்ணபேரி ஸ்ரீபரமசக்தி அம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடைபெற்றது.கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், முத்துகிருஷ்ணபேரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபரமசக்தி அம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை குற்றாலத்தில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு நாகர்கோவில் ரேவதி வில்லிசை, திருநெல்வேலி கனகராஜ் நையாண்டி மேளத்துடன்விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
2ம் நாள் மதியம் உச்சிகால பூஜையுடன், சாமியாட்டம் நடைபெற்று விழா நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
No comments