பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமானை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமையில் மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசு மாவட்ட தலைவர் வேங்கை மார்பன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் தினேஷ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் என 15க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென இருபுறமிருந்து சீமான் உருவ பொம்மைகளுக்கு வந்து எரித்தனர் இதனை கண்ட போலீசார் அதனை அணைத்தனர்.
மற்றோரு கூட்டத்தில் ஒரு உருவ பொம்மையை அணைத்து விட்டு திரும்ப வருவதற்குள் இன்னொரு உருவ பொம்மையை எரித்ததால் அண்ணா சிலை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments