மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா..... தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கல்


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இதே போல மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலமும் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து பதவி காலம் முடியும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  

ஒன்றியக்குழு தலைவர் ரவி தலைமையில் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகர், டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு ஒன்றிய குழு  உறுப்பினர்களுக்கு நினைவு கேடயம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் இதில் ஒன்றிய கவுன்சிலர்கள்வெற்றி, ரமேஷ் தமிஷ்ஷா, மாலதி. அன்பு. உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 ஊராட்சி மன்ற தலைவர். முத்து. மஞ்சுளா பஞ்சாட்சரம். பிரியா ராஜேஷ் கண்ணா. மாலதி சரவணன்.பாலாஜி. தேவி ராஜா. உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு.சால்வை அணிவித்து, நினைவு கேடயம் வழங்கினர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் தூய்மை பணியாளர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவருக்கும் பிரியாணியுடன் விருந்து அளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments