பாவூர்சத்திரத்தில் இலவச கண், கேன்சர் மருத்துவ முகாம்
பாவூர்சத்திரத்தில் இலவச கண் மற்றும் கேன்சர் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மல்லிகா முதியோர் இல்லம், மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை , சில்ரன், சாரிடபிள் டிரஸ்ட், ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் , எஸ் எஸ் மழலையர் பள்ளி, வாசன் கண் மருத்துவமனை, நெல்லை கேன்சர் சென்டர் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் கேன்சர் மருத்துவ முகாம் பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா தலைமை வகித்து, தொடங்கி வைத்தார்.
முகாமில், நெல்லை கேன்சர் சென்டர் சிறப்பு மருத்துவர் காயத்திரி தலைமையில் பரிசோதனை மருத்துவர் அபிராமி, ஆய்வக நிபுணர் மெரின், செவிலியர்கள் மஞ்சு, சக்தி, ஆகியோர் வாய் பரிசோதனை, மார்பகம் பரிசோதனை, ஹெர்ப்ப வாய் பரிசோதனை, செய்தனர்.மேலும் வாசன் கண் மருத்துவமனை செயல் அலுவலர் ரியாஸ் தலைமையில் ஆலோசகர் கஸ்தூரி, டெக்னிசன் ஆனந்தி, சுபிதா, கண்ஒளி பரிசோதகர் ஷீலா ஆகியோர் கண்புரை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை, போன்ற பல்வேறு கண் பரிசோதனை செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இம்முகாமில் எஸ்.எஸ். மழலையர் பள்ளி தாளாளரும், பாவூர்சத்திரம் ரோட்டரி கிளப் தலைவருமான சந்தானம், செயலாளர் அய்யாத்துரை, தொழிலதிபர் வைரசாமி, சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கினைப்பாளர் டிக்சன் குமார், மாவட்ட மிஷன் ஒருங்கிணைப்பாளரும் பெண்களின் அதிகாரமளிப்பதற்கான மைய அலுவலருதமான புஷ்பராஜ், தென்காசி மாவட்ட சகி ஒருங்கிணைந்த சேவை மையம் சமூக நலன்துறை, நிர்வாகி ஜெயராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கின்னஸ் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு விருது, துப்பரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
No comments