எந்த பள்ளிக்கு சென்றாலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.... தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

 




சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்தில் சுப்பிரமணியன் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பள்ளியில் படிக்கும் ஏராளமான மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறிய நிலையில் பின்னர் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கூடி பள்ளி நிர்வாக குழுவிடம் புகார் கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தினர். இந்நினையில் முன்னதாக அவர் ஏற்கனவே இப்படி பாலியல் புகாரில் சிக்கியதால் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவர் தர்மபுரியில் ஒன்றரை வருடங்கள் பணிபுரிந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கினார். இதைத்தொடர்ந்து மேட்டூரில் உள்ள ஒரு பள்ளிகளும் பின்னர் தற்போது இந்த பள்ளியில் பணி புரியும் நிலையிலும் மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். மேலும் தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்



Post a Comment

0 Comments