ஊத்துமலையில் நடைபெற்ற மின்னொளி கபடி போட்டியினை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்


 தென்காசி மாவட்டம், ஊத்துமலையில் மருது கபாடி குழு சார்பில் முதலாம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி   நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டி தொடக்க விழாவிற்கு தொழிலதிபர் தங்கத்துரை தலைமை வகித்தார். ஊத்துமலை உடையார், நாட்டாமை மகேஷ்குமார், மருது பாண்டி , ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர் வரவேற்றார்.முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். 

இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூர் திமுக செயலாளர் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகையா, முன்னாள் ஒன்றிய செயலாளர் சூட்டுசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேசன், அந்தோணிச்சாமி, இளைஞரணி அரவிந்த் திலக், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் (எ) தினேஷ், இளைஞரணி அசோக், ராமனூர் கணேசன், வழக்கறிஞர் அரிகரன், விஜயன், கிருஷ்ணசாமி, வாத்தியார்முருகையா, வேல்சாமி, பலபத்திரபுரம் கருணாநிதி, கண்ணன், ரமேஷ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்குளம் யூனியன் துணை சேர்மன் செல்வகொடி ராஜாமணி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments