திருக்குறள் போட்டியில் வெற்றி.... வீ.கே.புதூர் அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.... சான்றிதழ், பரிசுத்தொகை வழங்கினார்


திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற வீ.கே.புதூர் அரசு பள்ளி 2ம்வகுப்பு மாணவனை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார்.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவையொட்டி தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற வீ.கே.புதூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவன் ம.மாதவன் 3வது பரிசு பெற்றான். ஏற்கனவே இம்மாணவன் 100 யோகாசனத்துடன், 100 திருக்குறள் ஒப்பிவித்து உலக சாதனை படைத்திருந்தான்.

இந்நிலையில் தென்காசி நூலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவன் மாதவனை பாராட்டி சான்றிதழ் மற்றும் ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகையினை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி, யோகா மாஸ்டர் மருதுபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments