தடையை மீறி போராட்டம்.... பா.ம.கவினர் கைது

 


சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட பல கட்சிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

இந்நிலையில், இன்று (ஜன.,02) பா.ம.க. மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க., அறிவித்தது.அதன்படி, காலை 10 மணிக்கு, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற, சவுமியா உள்ளிட்ட பா.ம.க.வினரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் கைது செய்தனர். அவர்களை வாகனங்களில் போலீசார் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Post a Comment

0 Comments