தமிழக ஆளுநருடன் ABVP அமைப்பினர் சந்திப்பு

 


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ABVP அமைப்பின் மாநில செயலாளர் யுவராஜ், அலுவலக செயலாளர் ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து இருவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில், ABVP அமைப்பின் தேசிய செயலாளர் ஷ்ரவன் பி ராஜ் உள்ளிட்டோர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தனர். தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு மற்றும் ABVP அமைப்பினர் கைது உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் விவரித்தனர்.மேலும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஆளுநரிடம் வழங்கினர்.

Post a Comment

0 Comments