திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேல்முதலம்பேடு ஊராட்சி,குருத்தானமேடு கிராமத்தில் ரூ.9.5 லட்சம் செலவில் கவரப்பேட்டை-சத்தியமேடு நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டது.2023-24-ம் ஆண்டு மாநில நிதி குழு மாநில நிதி குழு மான்யத்திட்டம்,திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரிவேணு மேம்பாட்டு நிதியில் இந்த பஸ் நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டது.இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.அனைவரையும் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரிவேணு வரவேற்றார்.
பொன்னேரி சாராட்சியார் வாகேசங்கத் முன்னிலை வகித்தார்.இதில்,சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர். பொதுக்குழு உறுப்பினர் .பா.செ குணசேகரன் ஒன்றிய செயலாளர் கே வி ஆனந்தகுமார். கா.சு ஜெகதீசன்.மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் கவுன்சிலர்,ஜோதி, இந்திரா திருமலை, ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம். மீஞ்சூர் முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ்.. மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments