கும்மிடிப்பூண்டி தேர்வழியில் ஜே.ஜே.ஜே அக்னி சிறார்கள் சிலம்பாட்ட குழுவை ஆசான் கே.ஜானகி ஜோதி லிங்கம் என்பவர் நடத்தி வருகின்றார்.இதற்கு முன் உலக சாதனையாக 2 மணிநேரம் இடைவிடாமல் நட்சத்திர பூ பந்து என்கின்ற சிலம்ப பிரிவில் 25 பேர் கொண்ட குழு சிலம்பம் சுற்றியது உலக சாதனையாக இருந்தது.
இந்த நிலையில் குடியரசு தினத்தை ஒட்டி இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் ஜே.ஜே.ஜே அக்னி சிறார் சிலம்பாட்ட குழுவை சார்ந்த 90 சிலம்பாட்ட மாணவர்கள் இரண்டரை மணி நேரம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி தடகள விளையாட்டு மைதானத்தில் இடைவிடாமல் முற்பகல் 11.45 மணி முதல் மதியம் 02.15 மணி வரை நட்சத்திர பூ பந்து சுழற்றும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் சிலம்ப மாணவர்கள் 90பேர் இரண்டரை மணி நேரம் நட்சத்திர பூப்பந்து சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தனர்.
இந்த மாபெரும் சாதனையை* யுனிகோ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தின் நடுவர்கள் முன்னிலையில் நேரிடையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு. பின்னர் *யுனிகோ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இந்த சாதனை இடம் பெற்றுள்ளது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தேர்வழி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா குமார் துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக அம்பத்தூர் வட்டாட்சியர் கே.நித்தியானந்தம், சிலம்ப ஆசான்கள் எம்.கே.ஏழுமலை, பாக்ஸர் கஜேந்திரன், சூரிய பிரகாஷ், கோபாலகிருஷ்ணன், இராஜாமனி, வி.நிதி, கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து மாணவர்களுக்கு உலக சாதனை புரிந்ததற்கான பதக்கமும் சான்றிதழும் வழங்கினர்.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியை வழக்கறிஞர் .இரா. வேலு தலைமையில் ஜேஜேஜே சிலம்பாட்ட குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.இந்த சாதனை நிகழ்வின் போது இரண்டரை மணி நேரம் மாணவர்கள் நட்சத்திர பூப்பந்து சிலம்பத்தை சுற்றியபோது அவர்களது கைகளில் காயம் ஏற்பட்டாலும் அதனை பொருட்படுத்தாது சிலம்பம் சுற்றியது காண்பபோரை நெகிழ்ச்சிக்கு உட்படுத்தியது.
இந்த உலக சாதனை நிகழ்வை கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்து மாணவர்களை உற்சாக படுத்தினார்கள்.மேலும் சாதனை மாணவர்களையும் அவர்களது பயிற்சியாளர் ஆசான் ஜானகி ஜோதி லிங்கத்தையும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.
0 Comments