பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன்
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் சீசன் 8 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 5 போட்டியாளர்கள் பைனல் லிஸ்டாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இன்று இதிலிருந்து ஒரு போட்டியாளர் வெற்றி கோப்பையை தட்டி செல்வார்.
இவர்களில் யார் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் முத்துக்குமரன் முதலிடத்தை பிடித்து டைட்டிலை வென்றுள்ளதாகவும் பிக் பாஸ் சீசன் 8 கோப்பை அவருக்கு தான் என்றும் தெரியவந்துள்ளது. இது முத்துக்குமரன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த முத்துக்குமரனுக்கு சம்பளம் மற்றும் பரிசுத்தொகை என 51 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
No comments