• Breaking News

    தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்தது இலங்கை கடற்படை

     


    இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர் கதை ஆகிவிட்டது. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டை தொடர்ந்து தமிழக மீனவர்களை அவர்கள் கடலில் மீன் பிடிக்க விடாமல் கைது செய்து  அட்டூழியம் செய்கிறார்கள். சமீபத்தில் காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதன்படி ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    No comments