மாநில வளர்ச்சி நிதி..... தமிழகத்திற்கு ரூ.7057 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

 


மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மத்திய அரசு ரூ.1.73 லட்சம் கோடியை விடுவித்து உள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த டிச., மாதம் ரூ.89,086 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.

முதலீடுகளை அதிகரிக்க வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு செலவு செய்யும் வகையில் இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக உ.பி.,க்கு ரூ.31,089.84 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,057 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்து உள்ளது.

மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி

( அனைத்தும் கோடி மதிப்பில்)


ஆந்திரா- 7,002.52

அருணாச்சல பிரதேசம் - 3,040.14

அசாம்- 5412.38

பீஹார்-17,403.36

சத்தீஸ்கர்- 5,895.13

கோவா 667.91

குஜராத் -6017.99

ஹரியானா-1891.22

ஹிமாச்சல பிரதேசம்-1436.16

ஜார்க்கண்ட் -5722.10

கர்நாடகா -6310.40

கேரளா -3330.83

ம.பி., -13,582.86

மஹாராஷ்டிரா- 10,930.31

மணிப்பூர் -1238.90

மேகாலயா- 1327.13

மிசோரம் -865.15

நாகாலாந்து- 984.54

ஒடிசா-7834.80

பஞ்சாப்- 3126.65

ராஜஸ்தான்-10,426.73

சிக்கிம் -671.35

தமிழகம் -7057.89

தெலங்கானா- 3637.09

திரிபுரா - 1225.04

உ.பி.,- 31,039.84

உத்தரகண்ட் -1934.47

மேற்கு வங்கம் -13017.06

Post a Comment

0 Comments