மஹாராஷ்டிராவில் ரயில் மோதியதில் 6 பேர் பலி
மஹாராஷ்டிரா மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. பயணிகள் சிலர், தீப்பிடிக்கும் என அஞ்சி, அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனடியாக இறங்கி தண்டவாளத்தை கடக்க வேகமாக ஓடினர். அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு ரயில் இவர்கள் மீது மோதியது.
இச்சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
No comments