தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

 


தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் அதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments