இலக்கியப் பேராசான் ப.ஜீவானந்தம் 62 ஆம் ஆண்டின் நினைவு தினம்..... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கீழையூர் ஒன்றிய குழு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் இலக்கிய பேச்சாளராக திகழ்ந்த பேராசான் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் பிறந்தவர் ப. ஜீவானந்தம்.சென்னை மாகாணமாக இருந்தபோது மொழி வழி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் தமிழ்நாடு என்று தனியாக பெயர் சூட்ட வேண்டும் என சட்டமன்றத்தில் முதல் முதலில் குரல் கொடுத்தவராவார்.
மேலும் இந்தியாவின் மகாத்மா என்று அழைக்கக்கூடிய காந்தியடிகள் நேரடியாக ப.ஜீவானந்தம் நடத்திய ஆசிரமத்திற்கு சென்று ஆசிரமத்தை எப்படி நடத்துகிறீர்கள் என கேட்டபோது இந்தியாவே எனது சொத்து என சொன்னபோது இல்லை இல்லை. நீங்கள் தான் இந்தியாவின் சொத்து என காந்தியடிகளால் பாராட்டப்பட்ட இவர் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தமிழ் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து தனது எழுத்தாலும் பேச்சாலும் அரும் பாடுபட்டவர் . இவரது 62 ஆம் ஆண்டின் நினைவு தினம் முன்னிட்டு கீழையூர் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி. செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஒன்றிய துணைச் செயலாளர் வீ. எஸ் மாசேத்துங், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.ரமேஷ்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜி.சங்கர்,எஸ்.ரவி,ஏஐஒய்எஃப் ஒன்றிய தலைவர் ஆர்.கேசவன், கீழையூர் கிளைச் செயலாளர் ஆர்.மோகன்தாஸ், ஏஐடியுசி கீழையூர் யூனியன் லோடு மேன் சங்கத் தலைவர் ஆர்.செல்வம், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற ஒன்றிய அமைப்பாளர்கள் எஸ். சந்தோஷ்கான்,விஜய்ரமேஷ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மக்கள் நேரம் எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர்
ஜீ.சக்கரவர்த்தி
No comments