அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோவில் 62ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்துமாரியம்மன் கோவில் 62ம் ஆண்டு திருவிழா  நேற்று (ஞாயிறு) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14ந்Nதி பூக்குழி திருவிழா நடைபெறவுள்ளது.

பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரியில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோவிலில் 62ம் ஆண்டு திருவிழா   கொடியேற்றத்துடன் தொடங்கியது,  இதையொட்டி அதிகாலையில் 108 வேத விற்பன்னர்கள் பங்கு பெற்ற மஹா யாக சாலை பூஜையும், தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

10 நாட்கள் நடைபெறும்இத்திருவிழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றன.  அம்மன் சப்பரமானது 6ஆம் திருநாளான  10ந்தேதி (வெள்ளிக்கிழமை) மகிழ்வண்ணநாதபுரம், 11 ந்தேதி (சனிக்கிழமை )பெத்தநாடார்பட்டி, பொட்டலூர்,12 ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம்,  13 ந்தேதி (திங்கள்கிழமை) நாகல்குளம் ஆகிய ஊர்களுக்கு வீதிஉலா சென்று வரும்.

முக்கிய நிகழ்வான 10ம் திருவிழாவான 14ந்தேதி( செவ்வாய்கிமை) இரவு அம்மன் சப்பர வீதி உலாவும், அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.  திருவிழாவிற்கான  ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments