தமிழகம் முழுவதும் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு

 


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழகம்  முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் என்பது குவிந்து வருகிறது. அதாவது பெரியார் குறித்து அவர் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு எதிர்ப்புகள் வலுக்கிறது. அதாவது தந்தை பெரியார் தந்தை மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று சொன்னதாக சீமான் கூறிய நிலையில் அவருக்கும் சமூக நீதிக்கும் பெண்ணுரிமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூறினார்.

இதனால் நேற்று சீமான் வீட்டின் முன்பாக போராட்டம் நடைபெற்ற நிலையில் புதுச்சேரிக்கு சென்ற அவரின் காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இந்த தொடர்பாக ஆதாரம் கேட்கப்பட்ட நிலையில் ஆதாரம் இருக்கிறது என்று சீமான் கூறினார். சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சீமான் மீது வழக்குகள் என்பது குவிந்து வரும் நிலையில் இதுவரை 60 வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் இதனால் சீமான் கைதாக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

Post a Comment

0 Comments