மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி நகரில், உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன இந்நிலையில் தற்பொழுது பாலத்தின் கிழக்கு புறத்தில் லேசான விரிசல் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இதனைத் தொடர்ந்து கீழ்ப்புறத்தில் இருந்து ஹைட்ராலிக் உதவியுடன் விரிசலை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பாலத்தின் மேல் புறத்தில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட பொழுது வழக்கமான பராமரிப்பு பணி தான் என்றும், விரிசல் எதுவும் எழவில்லை எனவே அச்சம் தேவையில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சி மதுரை தஞ்சை உள்ளிட்ட மயிலாடுதுறையின் தெற்கு புற வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு இந்த பாலம் ஒன்று மட்டுமே இணைப்பு பாலமாக உள்ளதால் பாலம் பழுதடைந்தால் பெரும் நெரிசலை சந்திக்க நேரிடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் உடனடியாக மாப்படுகை பகுதியில் புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments