திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேளாண்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தொடர்ந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகர், டி.ஜே.கோவிந்தராஜன், பொன்னேரி கோட்டாட்சியர் வாகே பல்வன்சிங், வேளாண் துணை அலுவலர் பிரகாஷ், சோழபுரம் ஒன்றிய செயலாளர் செல்வ சேகரன்,ஆரணி பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி,ஆரணி நகர செயலாளர் முத்து,பொருளாளர் கரிகாலன்,முன்னாள் நகரச் செயலாளர்கள் கண்ணதாசன், ஜி.பி.வெங்கடேசன்,மற்றும் அரசுஅதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments