நாமக்கல்லில் பிரியாணி சாப்பிடும் போட்டி..... லாரி மெக்கானிக் முதல் பரிசு ரூ.5001 வென்றார்


நாமக்கல் - மோகனூர் சாலையில், சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் காலித் என்ற பிரபல பிரியாணி கடையின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில்  அதிக அளவில் பிரியாணி சாப்பிடுவோருக்கான போட்டி நடைபெற்றது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ. 5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதில் லாரி மெக்கானிக் பட்டறையில் பணிப்புரியும் சின்னமுதலைப்பட்டியை சேர்ந்த பிரபு 2.50 கிலோ பிரியாணியை 20 நிமிடத்தில் சாப்பிட்டு முதலிடம் பிடித்தார்.

நாமக்கல் நகரில், சேலம் சாலை மற்றும் மோகனூர் சாலையில் காலித் என்ற பிரபல பிரியாணி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் ஆண்டுதோறும் பிரியாணி சாப்பிடும் போட்டியை நடத்தி வருகிறது. கடந்த 2023 பிப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டியில் 35 பேர் கலந்து கொண்டனர். நாமக்கல் நகராட்சி ஒப்பந்த பணியாளர் சரவணன் என்பவர் அப்போது முதலிடம் பிடித்தார். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டி நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள உணவகத்தில் நடைபெற்றது. இதில், மூன்று பெண்கள் உள்பட 51 பேர் கலந்து கொண்டனர்.

 பெண்கள் பிரிவில் நாமக்கல் அன்பு நகரை சேர்ந்த நித்யா என்பவர் 1.50 கிலோ பிரியாணி சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.2,001 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த லாரி மெக்கானிக் பட்டறை தொழிலாளி பிரபு என்பவர் 2.50 கிலோ பிரியாணி சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.5,001 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 

இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் கேஷ் பேக்காக ரூ.50  வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உணவக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் பிரியாணி சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, இந்தப் போட்டி நடத்தப்பட்டது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments