சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்..... பாதுகாப்புப் பணியில் 5,000 போலீஸார்

 


சபரிமலை ஐய்யப்பன் சன்னிதானத்தில் இன்று மாலை மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்புப் பணியில் சுமார் 5,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. மாலை மகர விளக்கு பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட உள்ள திருவாபரண பெட்டி பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இன்று மாலை 6.30 மணிக்கு சபரிமலை சன்னிதானத்தை வந்தடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இதனைத் தொடர்ந்து திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு இன்று மாலை தீபாராதனை நடைபெறும்.இந்த சமயத்தில் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரியும். மகர ஜோதி தரிசனத்தைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வரும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments