மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் டங்க்ஸன் சுரங்கத்திற்கு எதிராக நேற்று பேரணி நடத்தினர். கிட்டத்தட்ட 5000 பேருக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் மதுரை தபால் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் தூரம் 7 மணி நேரமாக நடந்து அனைவரும் தமுக்கம் மைதானத்தில் வந்து திரண்டனர்.
இதன் காரணமாக 2000க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் அவர்கள் தடையை மீறி பேரணி நடத்தினர். மேலும் இதன் காரணமாக 5000 பேர் மீது தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி பெண்கள் மற்றும் விவசாயிகள் உட்பட 5000 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments