சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய விசிக உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், பழுதானா பேருந்துகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கமளிப்பாரா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 3 ஆயிரத்து 4 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் 500 புதிய மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் கூறினார்.
மேலும், அதிகாரிகளின் கவனக்குறைவால் பழுதான பேருந்துகள் அனுமதிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
0 Comments