50 கிலோ பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்..... 82 வயது மூதாட்டி சாதனை

 


கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் கிட்டம்மாள் (82) மூதாட்டி தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து தானும் கற்றுக்கொண்டு பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பளு தூக்கும் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் கிட்டம்மாள் தங்கப் பதக்கம் என்று சாதனை புரிந்துள்ளார்.

தலைநகரான டெல்லியில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர் லிப்டிங் ஃபெடரேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்று 50 கிலோ எடை பிரிவில் பளு தூக்கி முதலிடத்தை தட்டி சென்றார். பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற கிட்டம்மாள் மூதாட்டிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments