சிவநாடானூர் ஊராட்சியில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள 5 மின் கல வாகனங்களை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், சிவநாடானூர் ஊராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசின் சார்பில் 5 மின் கல வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி கலந்து கொண்டு தூய்மைப்பணியாளர்களிடம் வாகனங்களை ஒப்படைத்து, தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் அனிதா சிவபொன்சிங், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அருமை கண்ணன் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சாமிதுரை நன்றி கூறினார்.
0 Comments