பேருந்து மீது காய்கறி லாரி மோதியதில் பக்தர்கள் 4 பேர் பலி

 


கர்நாடகாவைச் சேர்ந்த சில பக்தர்கள் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து தரிசனத்திற்காக சென்றனர். இவர்கள் தரிசனம் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் இவர்கள் சென்ற பேருந்து ராணிப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னை நோக்கி காய்கறிகள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் 4 பக்தர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பேருந்து மீது லாரி மோதிய நிலையில் அடுத்தடுத்து டிப்பர் உட்பட தொடர்ந்து 3 வாகனங்கள் மோதியததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments