சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர்..... நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை

 


சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான அபுஜ்மாத் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினருக்கு இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று மாலை முதல் இன்று வரை, நக்சலைட்டுகளுக்கு, பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.ரக 47 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தெரிகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments