குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டோர், அரசு கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்படுகின்றனர். இத்தகைய அரசு கூர்நோக்கு இல்லம் திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வருகிறது.இந்த இல்லத்தில் 40க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் இன்று (ஜன., 14) பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை தள்ளி விட்டு கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு சிறுவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து வெளியூர் செல்வதற்காக தப்பிச்சென்று கொண்டிருந்த சிறுவர்கள் நால்வரும், சில மணி நேரத்தில் போலீஸ் படையினரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
0 Comments