பெருங்களத்தூர் வடக்கு பகுதி 49வது வட்ட கழக சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது


தாம்பரம் மாநகர பெருங்களத்தூர் வடக்கு பகுதி 49வது வட்ட திமுக சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா கஸ்தூரி பாய்நகர், காட்டு கருமாரியம்மன் கோயில் அருகில் பகுதி கழக செயலாளர் 4வது மண்டல குழுத்தலைவர் டி.காமராஜ் தலைமையிலும் வட்ட பிரதிநிதி ஆர். சீனா வரவேற்பிலும் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து   சிறப்புரையாற்றினார்கள். உடன் முன்னாள் பேச்சாளர் எஸ்.ஜி.கருணாகரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் சர்தார், கார்த்திக் உட்பட பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments