அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 41ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 41 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் முன்னாள் முதல்வர் சண்முகம், பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 2023 - 2024 ம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த "அமைப்பியல் துறை", "இயந்திரவியல் துறை", "வணிகவியல் துறை", "மின்னனு இயல் துறை", "கணினி பொறியியல் துறை" ஆகியவற்றில் படித்த 100 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சர்வம் சரவணன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments