திருவள்ளூர்: அனைத்து முஸ்லீம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டியின் 41வது பொதுக்குழு கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டியின் 41வது பொதுக்குழு கூட்டம் மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆரம்பாக்கம் மஸ்ஜிதே நைணா அஹ்மத், பீமளவாரிபாளையம் மஸ்ஜித் அஹ்மத், ஆரம்பாக்கம் மஸ்ஜித் பாத்திமா பள்ளிவாசல் இணைந்து ஆரம்பாக்கத்தில் நடத்திய இந்த முஸ்லீம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டியினௌ 41வது பொதுக்குழு கூட்டத்தில் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த 163 பள்ளிவாசல்களை சேர்ந்த இமாம் மற்றும் தலைவர் பொருளாளர் செயலாளர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் மௌலானா அல்ஹாஜ் பி.எஸ்.நாகூர் மீரான் தலைமை தாங்கினார்.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி பொதுச்செயலாளர் இ.எம்.முஹம்மது அலி, பொருளாளர் எம்.சுலைமான் சாஹிப், கௌரவ தலைவர்கள் எம்.சீனி ஹாதிம் கனி, எஸ்.குலாம் மொய்தீன் சாஹிப், எம்.எம்.முகம்மது மூஸா சாஹிப், கௌரவ ஆலோசகர்கள் ஏ.கே.செய்யது இப்ராஹீம், ஏ.நூர் முஹம்மது சாஹிப் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தை ஜமாஅத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஏ.முஹம்மது அலி துவக்கி வைத்தார். இதில் பீமளவாரிபாளையம் மத்ரஸா அஹ்மதியா இமாம் யு.ஏ.முஹ்யத்தீன் துவக்க பிரார்த்தனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் , பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்குனர் சிஎம்என்.சலீம், திருவள்ளூர் மாவட்ட அரசு காஜி அப்துல்காதிர் பங்கேற்று சிறப்புரைஆற்றினர்.
இதனை தொடர்ந்து பொதுக்குழு தீர்மானங்களை டி.சேக் அஹமது தீர்மான விளக்கவுரை வாசித்தார். எம்.எம்.எஸ்.ஹாஸ் மிஸ்பாஹ் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகள் பலர் பேசினர். கூட்ட முடிவில் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கமிட்டி இணைச் செயலாளர் டி.எஸ்.மஸ்தான் நன்றியுரை கூறினார்.
இந்தக் கூட்டத்தில் நாட்டில் 76 வது குடியரசு தின விழாவில் அனைத்து மஸ்ஜித் வளாகங்ளில் தேசியக்கொடி ஏற்றவும், சுதந்திரப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம் பங்கு குறித்து எடுத்துக் கூறவும், அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளையும் எடுத்து கூறவும் தீர்மானம் ஏற்றப்பட்டது.
அவ்வாறே மதராசாவின் ஆண்டு விழாவை ஒட்டி மதராசாவில் படிக்கும் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழாவை நடத்தி இறைக் கல்வியின் ஆர்வத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவது குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது.
சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ் மாநில ஜமாத் உலமா சபையினர் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை அனுப்பியதின் பேரில் 13 சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ததை ஒட்டி நன்றி தெரிவித்தும் மேற்கொண்டு 22 சிறைவாசிகளை விடுதலை செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானம் இயற்றப்பட்டது.
அவ்வாறே திருவள்ளூர் மாவட்டத்திற்கு இரண்டாவது மகளிர் உதவி சங்கம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது .
No comments