கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாத்தன் கோடு வடக்கே தோப்பு பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் பெயிண்டராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பல இடங்களில் பெண் பார்த்த நிலையில் இறுதியாக கேரளாவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வருகிற 9-ம் தேதி கல்யாணம் நடைபெற இருந்தது. இரு வீட்டு உறவினர்களும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்து நிலையில் ராஜேஷ் பெண் ஒல்லியாக இருப்பதாகவும் தனக்கு பிடிக்கவில்லை எனவும் கூறிவந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக அவர் மன வேதனையில் இருந்துள்ளார்.
அவரை உறவினர்கள் தேற்றி வந்த நிலையில், நேற்று திடீரென தன்னுடைய சித்தி வீட்டுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து நிலையில் பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் எழுதிய ஒரு தற்கொலை கடிதமும் சிக்கியது. அதில் எனக்கு வாழ பிடிக்கவில்லை என் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடைபெற்ற நிலையில் திருமணத்திற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments