பிரசாந்த் மருத்துவமனை சார்பில் 3வது கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டியை டி.ஜே.எஸ் கல்வி குழுமம் தலைவரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்


கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இடையே இதய ஆரோக்கிய குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சென்னையில் உள்ள முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனை சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும்  இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டு இதன் 3வது கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி – 2025 இன்று முதல் துவங்கி ஜனவரி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், அதன் புகழ்பெற்ற 'இளம் இதயங்களை காப்போம்’ என்பதை வலியுறுத்தும் அதே வேளையில், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரசாந்த் மருத்துவமனைகள் திட்டமிட்டுள்ளது. இளம் தொழில்நுட்ப நிபுணர்களிடையே இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை இந்தப் போட்டி ஏற்படுத்துவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான உடற்பயிற்சி குறித்தும் அவர்களிடம் வலியுறுத்துவதையும் இது முக்கிய நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டியை புதுவாயலில் உள்ள டிஜெஎஸ் என்ஜினியரிங் கல்லூரியில், டிஜெஎஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் கோவிந்தராஜன், பிரசாந்த் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா, தலைமை செயல் அதிகாரி டாக்டர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இதில் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த மொத்தம் 36 அணிகள் பங்கேற்கின்றன. முதலில் கெல்லனோவா (Kellanova) அணி Vs பிரிஸிஸன் ஹைட்ராயூக்ளிக்ஸ் காம்போனென்ட்ஸ் (Precision Hydraulics Components) அணி இடையே போட்டி நடைபெறுகிறது. 


இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா.கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை இதய ஆரோக்கியம் என்பது மருத்துவ பராமரிப்புக்கு அப்பாற்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம். அந்த வகையில், கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டியானது அவர்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குழுப்பணியை வளர்க்கவும்  உதவுகிறது என் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் டி.ஜெ.எஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் கோவிந்தராஜன் பேசுகையில், பிரசாந்த் மருத்துவமனையின் இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மீண்டும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முயற்சி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளின் பங்கை, குறிப்பாக இளம் நிபுணர்களிடையே வலியுறுத்துகிறது. இன்றைய உட்கார்ந்த நிலையிலான பணியில் வழக்கமான உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது என்பது மிகவும் அவசியம் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்த 3.வது கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டியானது, கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இன்று முதல் ஜனவரி 26 வரை நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு நாளும் 9 போட்டிகள் நடைபெறும். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments