வெங்கடேஸ்வரபுரம் பள்ளியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள கிராமக்கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் 1987-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு விழா 37 ஆண்டுகளுக்கு பிறகு குற்றாலத்தில் நடைப் பெற்றது. தலைமை ஆசிரியர் குகன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஜெகநாதன், துணை தலைமை ஆசிரியர் அமிர்தவள்ளி , ஆசிரியை நாரயண உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர் அற்புதராஜ் தொகுப்புரை வழங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியர்கள் துரை, ஐய்யத்துரை, ஆசிரியர்கள் சுப்பையா , செல்வராஜ், ஜெயராஜ், ஆசிரியை பார்வதி,உதவியாளர் வீரசின்னு ,ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. 37 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது குடும்பத்தினருடன் சந்தித்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் தாங்கள் பள்ளியில் பயின்ற காலங்களில் நடைபெற்ற நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர் .
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ஜேக்கப் ராஜ்குமார், முருகையா, விஜயகுமார் செல்வன், பத்மராஜ், பொன்ராஜ், ரமேஷ், கமலம் ஆகியோர் செய்திருந்தனர்.
0 Comments