• Breaking News

    தேனி மாவட்டம் சின்னமனூரில் 32 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி உற்சாகம்


    தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள கிருஷ்ண ஐயர் மேல்நிலைப் பள்ளியில் 1992 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி பருவம் என்றாலே அனைவராலும் மறக்க முடியாத ஓர் நிகழ்வாக உள்ளது. பள்ளி பருவ காலங்களில் கல்வி பயின்றவர்கள் தங்களது இடையில் அதனை பொக்கிஷமாக கல்வி வருகின்றனர். அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்த காலங்களை நினைவுகூர்ந்தும் தங்களது சக நண்பர்களையும் பருவ காலங்களின் நடைபெற்ற சம்பவங்களையும் மனதில் நீங்காமல் ஏற்றி வைப்பது இயல்பான ஒன்றாகும்.  

    பள்ளியில் பயின்ற சக தோழர்களை மீண்டும் சந்திக்கும்போது அவர்களுக்குள் அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதனை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் மூலம் முன்னெடுத்து நடத்தி விடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக 1992 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு கிருஷ்ண ஐயர் பள்ளியில் படித்த மாணவர்கள் whatsapp குழு ஒன்று அமைத்து அதன் மூலம் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்துவதற்கு முன் வந்தனர். 

    32 ஆண்டுகள் கழித்து இன்று பள்ளி வளாகத்தில் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட 92 வது வருடம் பத்தாம் வகுப்பு  படித்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரிய பெருமக்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் பெருமக்களுக்கு பரிவட்டம் கட்டி பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.மே,லும் மாணவர்களும் ஆசிரிய பெருமக்களும் அன்றைய காலகட்டத்தில் பள்ளியில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புகைப்படங்கள் எடுத்து தங்களது சந்தோஷத்தினை வெளிப்படுத்தினார். அதேபோன்று தாங்கள் பயின்ற வகுப்புகளுக்குச் சென்று வகுப்பறையில் அமர்ந்து தங்களது ஞாபகங்களை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

    இந்த நிகழ்வில் கலந்து கொண்டார் மாணவர்களும் ஆசிரியர்களும் கூறும்போது பள்ளி பருவ காலங்களில் ஏற்பட்ட இனிமையான அனுபவத்தினை மீண்டும் வெளிப்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றும் இதன் மூலம் தங்களது பழைய கால நண்பர்களை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது மேலும் தங்களது வாழ்வில் முன்னேற்பதற்கு உறுதி இணையாக இருந்த ஆசிரிய பெருமக்களுக்கு தங்களது மரியாதை செலுத்தும் வண்ணமாகவும் இது அமைந்துள்ளது என தெரிவித்தனர் ஆசிரிய பெருமக்கள் கூறுகையில்  தங்களிடம் பயின்ற மாணவர்கள் இன்று நல்ல நிலைமையில் உள்ளதை காணும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர்கள் வாழ்வின் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் எனவும் தெரிவித்தனர். ஒவ்வொரு முன்னாள் மாணவர்களும் இது போன்ற சந்திப்புகளை நிகழ்த்தி தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறினார்.

    No comments