நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத் எல்லையில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
கட்டிட இடுபாடுகளில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்தத நிலையில் சீனாவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் டெல்லி மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments