நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நல சங்கத்தின் 30 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று திருச்செங்கோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாமக்கல் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் கூறும் போது பெட்ரோல் பங்குகள் இருசக்கர வாகனங்களில் ஆயில் மாற்றி கொடுக்கிறது. இதனை நிறுத்த வேண்டும் தமிழக அரசு இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்போருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் ஏற்கனவே தானியங்கி மோட்டார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் பல லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தில் உள்ளதால் தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் பிஎஸ் ஆறு வகை இன்ஜின்கள் தற்போது இருசக்கர வாகனத்தில் வருவதால் அதனை பழுது நீக்க அரசு சார்பில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் இருசக்கர பழுது பார்ப்போருக்கு புதிய தொழில்நுட்பம் குறித்தும் பழுது நீக்குவது குறித்தும் வகுப்புகள் எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்து புதிய வாகனங்களை அறிமுகம் செய்தனர் இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட பொருளாளர் ராதா ராஜா திருச்செங்கோடு சங்க செயலாளர் பழனிச்சாமி பொருளாளர் அண்ணாதுரை துணைத் தலைவர் தியாகராஜன் துணைச் செயலாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments