பொங்கல் பண்டிகை..... ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு.....

 


தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் அதனை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயங்கும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுவாக பண்டிகை தினங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அந்த சமயங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுவது வழக்கம்.

ஆனால் அரசாங்கம் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான புகார்கள் எழத்தான் செய்கிறது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது கூட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகையிலும் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதால் தற்போது அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருப்பார்கள். இந்த குழுக்கள் அடுத்த வாரம் முதல் செயல்படும் நிலையில் நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் திடீரென பேருந்தை நிறத்தி சோதனை மேற்கொள்வார்கள். ஒருவேளை ஆம்னி பேருந்துகளில் விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் பர்மிட் சஸ்பெண்ட் மற்றும் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் இனி பொங்கல் பண்டிகையில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்ற குற்றசாட்டு எழாது என்று நம்பப்படுகிறது.

Post a Comment

0 Comments