மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம், மற்றும் கால நிலை மாற்ற துறை, மாநில அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, சார்பில் சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வி. தமிழ்ஒளி ,கொடி அசைத்து துவக்கி வைத்தார். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் D. விஜயகுமார் துண்டு பிரசுரங்களை வழங்கி துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து, நாகூர் வரை பேரணி நடைபெற்றது. தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கும், கடை வைத்திருப்பவர்களுக்கும், பயணிகளுக்கும் வழங்கப்பட்டன. அதுபோல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. மைக் மூலம் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில், நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய ஒருங்கிணைப்பாளர் எஸ். செங்குட்டுவன், மாவட்ட ஆட்சியரக பசுமை ஒருங்கிணைப்பாளர் செல்வி. டிவைனியா, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு திட்ட ஏற்பாட்டாளர் செல்வி .ஆன்லி அன்ன குரியன், தொழிற்பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த தொழிற்பயிற்றுநர்கள் ஆசிரியர்கள் ஆர். வெங்கடேசன், எஸ் ரமேஷ் உடற்கல்வி ஆசிரியர் ஜிப்சன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை சுற்றுச்சூழல் கல்வி மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மா முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.
மக்கள் நேரம் எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர்
ஜீ.சக்கரவர்த்தி
0 Comments