பனி மூட்டத்தால் தரைமட்ட கிணற்றில் லாரி பாய்ந்து தமிழக டிரைவர்கள் 2 பேர் மகாராஷ்டிராவில் பலி


நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே செம்பாம்பாளையத்தைச் சேர்ந்த வர் தங்கவேல் மகன் சதீஷ்குமார்(30), எம் சிஏ பட்டதாரி. லாரி டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை.

கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த வர் ஆறுமுகம்(50), டிரைவர். இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், 2 மகன் களும் உள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி சதீஸ்குமார், ஆறுமுகம் இருவரும், மல்லசமுத்திரத்தில் இருந்து லாரியை எடுத்துக் கொண்டு மகாராஷ்டிரா மாநி லத்திற்கு லோடு ஏற்றுவதற்கு சென்றனர். அங்குள்ள மண்மேடு புரோக்கர் லாரி ஆபீசில் இருவரும் தங்கினர்.

கடந்த 3ம் தேதி லோடு ஏற்றுவதற் காக, மண்மேட்டில் இருந்து லாரி புறப்பட் டது, லாரியை சதீஷ்குமார் ஓட்டினார். அப் போது 10 கி.மீ தொலைவில் சென்றபோது, நாசிக் மாவட்டம் குண்டல்கால் என்ற இடத்தில் பனிமூட்டம் காரணமாக வழி தெரியாமல், சாலையோரத்தில் இருந்த தரை மட்ட கிணற்றில் லாரி பாய்ந் தது. இதில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இது குறித்து  சதீஷ்குமார், ஆறுமுகம் பின்னால் வந்த லாரி டிரைவர் கொடுத்த தகவலின் பேரில், கிரேன் வரவழைக்கப் பட்டு லாரியை கிணற்றில் இருந்து எடுத்தனர் சதீஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டார். ஆறுமுகத்தின் செருப்பு மட்டும் லாரி யில் இருந்தது. பின்னர், கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, ஆறுமுகத்தை சடலமாக மீட்டனர்.

இருவரது உடலையும் கைப்பற்றிய குண்டல் காவு போலீசார், குண்டல்கா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதைய டுத்து, செம்பாம்பாளையத்தில் சதீஷ்குமார் உடலும், கூத்தம்பாளையத்தில் ஆறுமுகம் உடலும் தகனம் செய்யப்பட்டது. இது குறித்து குண்டல் காவு போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் ஜெ.ஜெயகுமார் நாமக்கல் மாவட்டம்

Post a Comment

0 Comments