கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியில் இருந்து நெல்லையப்பபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலும், கோவிலூற்றில் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டிலும், மயிலப்பபுரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர் தலைமை வகித்தார்.முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 3 பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், கடையம் பாக்கியராஜ், வார்டு உறுப்பினர் சண்முகராம், ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெயசிங், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குமார், இளைஞரணி நவீன், காங்கிரஸ் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ராஜாராம், கிளை செயலாளர்கள் ஜெயராஜ், செல்வன், சுப்பிரமணியன், ஒன்றிய பிரதிநிதிகள் வேலுச்சாமி, பன்னீர்செல்வம், கந்தன், கிளை செயலாளர்கள் சுப்பிரமணியன், தொழிலதிபர் அசோக், ஊராட்சி செயலர் பாரத், திமுக நிர்வாகிகள் திருமால், மணியன், ராஜபாண்டியன், செல்வராஜ், காசிபாண்டி, ராஜா, விஜயராஜ், சுப்பிரமணியன், பரமசிவன், பிரகாஷ், குணசேகரன், பொன்ராஜ், ஜான்சன், எட்வின் செல்வமணி, ஜெயா, ஜானகி, ஜெயபிரதா, ஜெயந்தி, வள்ளி, கண்ணகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments