நாகையில் தமிழக ஊரக வளர்ச்சித் துறையினரின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்..... போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பேனர்களை போலீசார் வலுக்கட்டாயமாக பறித்து கொண்டதால் வாக்குவாதம்


தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய படி நாகூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை  தேர்வுநிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் சாலையில் பேனர்களை விவரித்து படி அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பியவர்களை போலீசார் அப்புறப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக கோஷங்களை எழுப்பினர் அப்போது போலீசார் வலுக்கட்டாயமாக அவர்கள் வைத்திருந்த பேனர்களை பிடுங்கியதால் அலுவலர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 



தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினார் இதனால் நாகை நாகூர் சாலையில்  சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மக்கள் நேரம் எடிட்டர் நாகை மாவட்டம் நிருபர் ஜீ.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments