திருநெல்வேலியில் உள்ள டக்கரம்மாள்புரத்தில் இன்று காலை ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இன்று காலை டக்கரம்மாள்புரம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 20–க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
0 Comments